கலாமிற்கு சமர்ப்பணம்
நிஜம் ஓய்ந்தது அன்று
உன் நினைவு மலர்ந்தது இன்று
பேய்க்கரும்பு சென்று
உன் பெயர்ச்சொல்லி அழுவோம் இன்று
அக்கினி சிறகு ஒன்று
அமைதியாய் உறங்குதே இன்று
கனவு காணுங்கள் என்று
எங்கள் உறக்கம் கலைத்தாய் இன்று
மாணவர் மனங்களை வென்று
மயக்க நிலையில் நீ இன்று
ஈடில்லை உனக்கொருவன் என்று
விஞ்ஞானமும் விரக்தியில் இன்று
தோல்விகள் பல கொன்று
தொலைந்து போனாய் இன்று
உன் சாதனைக்குண்டு ஆயிரம் சான்று
எங்கள் வேதனைக்கில்லை ஆறுதல் இன்று
வெற்றி வேண்டும் உன் போன்று
உன் வெற்றிடத்தால், அது வேறிடத்தில் இன்று
மீண்டும் இம்மண்ணிலே தோன்று
இதற்காய் பிரார்த்திக்கிறோம் இன்று ... !!!
- க. அருணன்