நம் காதல்
நீ என்னோடு இல்லாதபோது...
கடிகாரம் என்னவோ.....
வாட்டம் கொண்டு
ஓட்டம் குறைத்ததுபோல....
கணங்களே யுகங்களாக நகர்வதும்.....
நீ என்னோடு இருக்கையில்....
அதே கடிகாரம்
சோகம் களைந்து
வேகம் எடுத்ததுபோல.....
சில நீண்ட நேரங்கள் கூட
சீக்கிரம் மாண்டு போவதுமாக....
மொட்டவிழ்ந்த நாளிலிருந்து
முளைத்து மலர்ந்திருக்கும் இந்நாள் வரை.....
முரண்களின் ஊடே பயணித்து
மகிழ்ச்சி மணம்பரப்பி....இப்போது
முடிவில்லா நிலை எய்தும்
முயற்சியில்......
நம் காதல்.....!!!