கூந்தல்கைதி
அலங்கோலத்தின் ஓர் அங்கீகாரம் உன் கலைந்த கூந்தலில் கண்டேன்!
உன் கூந்தல் வருட, என் விரல் சீப்பாய் மாற பேராசை கொண்டேன்!
பொடுகு பதிந்த உன் கூந்தல் புது வைரமோ என, களவ தொடர்ந்தேன் ஒரு கள்வனாய்!
அதன் மதிப்போ உன் கூந்தல் விட்டு இறங்கும் வரை மட்டும் என, தெளிந்தேன் ஒரு காதலனாய்!
புயலோடு போர் புரிய ஏக்கத்தில் திழைத்தேன்!
உன் கூந்தல் அசைவு தாக்கத்தில் திகைத்தேன்!
வாசமிலா பூக்கள் வாசம் காண ஏறியதோ உன் கூந்தலில்!
மலை விட்டு விழும் அருவியாய்,ஒற்றை முடி உன் நெற்றியில்!
இரு நாகத்தின் இன்ப விளையாட்டே உன் பின்னலடி!
உன் நெற்றியில் ஒற்றை குங்குமம் தீட்ட ஏக்கமடி!!!
-பிரவின்