மழைக் குழந்தை
நீர்க்ககருவை வயிற்றில் தாங்கி நடைபயின்ற மேகமகள்
பிரசவ வலியால் துடி துடித்தாள் அதைக் கண்ட
சகோதரக் காற்று தன் வேதனை தணிக்க அங்கும் இங்கும் சுழன்றடிக்க
தங்க வாழ் தாங்கி ஓடி வந்த இடியண்ணன் வான்பிளந்து சோகம் தீர்க்க
தங்கை மேகம் கருங்கூந்தலினால் சூரிய முகம் மறைத்து உஷ்ணம் குறைக்க
செவ்வாடை களைந்த பூமிப் பெண்ணால் கருவாடை
தரித்து பிரசவம் பார்க்கத் தயாராகும் வேளையிலே
மேக மகள் தன் குழந்தையை பிரசவித்தாள்
தாதி மகள் தன் கரங்களினால் நீர்மழலை தாங்கி நின்றாள்
அஸ்லா அலி