பார்வையில் வாழ்கிறேன் வீழ்கிறேன்

சட்டென்று ஒரு பார்வை வீசி விட்டு
பட்டென்று தலை கவிழ்ந்து கொள்கிறாய் !

நான் தான் கவிழ்ந்து, வீழ்ந்து நிமிர்ந்து
எழுவதை கவனிக்காமல் போய் விடுகிறாய் !

***********************************************************
உன் சிரம் தாழ்த்திய பார்வையில்
என்னை உன் இதயசிறையின் கைதியாய்
அடைத்துக்கொள்ளும் உரிமையை நீயே
எடுத்துக்கொண்டாயா !
***********************************************************
விழி வெண்படலத்தின் நடுவே கருவிழி இருக்கிறது
என்பதன் நம்பிக்கையை பொய்த்துப்போக செய்து விட்டாய்
இரண்டு "காந்த உருண்டைகளை "வைத்துக்கொண்டு !

பார்க்கும் பொழுதெல்லாம் என்னை இப்படி இழுக்கிறாய்
காதல் வம்புக்கு !

***************************************************************

கத்தியா ! கூர்வாளா ! அரிவாளா ! ஈட்டியா !
நான் வரவில்லையடி ! சத்தியமா !
உன்னோடு பார்வை சண்டைக்கு !
***********************************************************

இப்படி பார்த்து பார்த்தே கொல்கிறாயே நியாமா உனக்கு !

இப்படி கவிதையாய் எழுதி
என்னை கவிழ்த்தாயே நியாமா உனக்கு !
*************************************

எழுதியவர் : முபா (1-Aug-17, 5:25 pm)
பார்வை : 2930

மேலே