ஏறு முனனேறு தம்பி
ஏறு முனனேறு தம்பி
ஏறு முனனேறு தம்பி - நீ
எளிமையைக் கடைபிடி தம்பி
சிந்தும் வியர்வை உன்னை - அந்த
சிகரத்தில் ஏற்றிடும் தம்பி
வெயிலும் மழையும் பாராமல் - நீ
வெட்டி வேலைகள் செய்யாமல்
சிட்டாய் பறந்திடு தம்பி - பல
சிறப்புகள் குவிந்திடும் தம்பி
விதையாய் விழுந்திடு தம்பி - நீ
விருட்சம் போல்எழு தம்பி
உலகில் உன்கொடி நாட்டி - நீ
உச்சப் புகழ்பெறு தம்பி
பகையை மறந்திடு தம்பி - நெஞ்சில்
பாசம் பெருகிடும் தம்பி
இனிக்கப் பேசிடு தம்பி - பல
இன்னல் விலகிடும் தம்பி
புலரும் பொழுதைப் போற்றி - நீ
புன்னகைப் பூத்திடு தம்பி
பிறரைப் புண்பட பேசி - நீ
அறத்தை மீறாதே தம்பி
கூழோ கஞ்சோ குடித்தாலும் - நீ
கொடுஞ்செயல் செய்யாதே தம்பி
குவலய மக்கள் நெஞ்சில் - நீ
குந்தும் படிநட தம்பி
கேடில் காத்திடும் கல்வி - அதை
நாடி ஒடிடு தம்பி
பட்டம் பதவிகள் பெற்றாலும் - நூல்
படிப்பதை விடாதே தம்பி
நரிபோல் மனிதரைக் கணடால் - நீ
நடுங்கி விடாதே தம்பி
பேச்சில் வாள்வீச்சு காட்டி - அவர்
மூச்சை அடக்கிடு தம்பி
அதிகம் இருப்பதை அள்ளி - நீ
அடுத்தவர் வாழ்ந்திடக் கொடுத்தால்
அகிலத்தில் உள்ள உயிர்கள் - உன்னை
ஆண்டவன் எனத்தொழும் தம்பி.
பாவலர். பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
