அன்பு

பணத்திற்காய், பொருளுக்காய்
அலைந்து திரிகிறார் மானிடர்
பெரும் தனம்கொண்டு தரணியில்
நினைத்ததை வாங்கிவிடலாம்
என்று ஆணவத்தால் எண்ணி நிற்கின்றார்
இவர்கள் அறியவில்லை ஒன்றை
இந்த தனமெல்லாம் கொண்டு
அன்பை விலைக்கு வாங்க ஒரு போதும்
இயலாது, அன்பை அன்பால் மட்டுமே
அடையமுடியும் ஆம்
அன்பின் வழியது உயிர்நிலை வள்ளுவன் வாக்கு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Aug-17, 7:37 am)
Tanglish : anbu
பார்வை : 103

மேலே