குறு பாரதம்

சகுனி
"சூதாடினான்"
துரியோதனன்
சூதில் வென்றான்
தர்மன்
சூதில் தோற்றான்
பாஞ்சாலி
என்ன பாவம் செய்தாள்?
துர்சாதனன்
துகிலுரிக்க!

பாண்டவர்கள்
கர்ப்பத்தில் பிறந்தவர்கள்
கௌரவர்கள்
கர்வத்தில் பிறந்தவர்கள்

கிருஷ்ணன் எனும்
ஆண்டவன் அருளுரை கேட்டு
பாண்டவம் ஆடிய
தாண்டவத்தால்
காற்றில் போனது
கௌரவத்தின் கெளரவம்

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (4-Aug-17, 9:15 am)
Tanglish : kuru paaratham
பார்வை : 146

மேலே