வாலிபம் தின்ற வறுமை

நான் நட்டு வைத்த பூச்செடிகளெல்லாம்
பூச்சொறிந்து நிற்க நானோ பேச்சிழந்து
வாடுகிறேன்..!

இல்லாமை என் இல்லத்தை
நிரப்பிக்கொண்டிருந்த வேளை
சொல்லாமல் சொர்க்கத்திற்கு போனவர்
சோகம் சொல்லி எவரிடம் அழுதாரோ??

என் முதுகில் சம்மணமிட்டமர்ந்து
அவமானத்தை சன்மானமாய்
ஈட்டித்தந்தது கடன்..!

காலம் என் காதலையும் வேட்டையாடி
என் கோலம் கண்டு கொண்டாடியது..!

உடன் பிறந்தவளுக்கு
இல்வாழ்க்கை அமையும் முன்னே
இவ்வழுக்கையும் என்னில்
வலுக்கட்டாயமாக வந்தாகிவிட்டது..!

என் மணநாளையெண்ணி யெண்ணியே
மனநோயாளி ஆகிக்கொண்டிருக்கிறாள்
ஈன்றவள்லல்லவா..!

ஒருமையில் எனைத்தள்ளிவிட்டு
வெறுமையில் உயிர்கொல்லியிட்டு
பெருமையில் தினம் துள்ளி குதிக்கிறது
வாலிபம் தின்ற வறுமை..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (4-Aug-17, 5:13 pm)
பார்வை : 174

மேலே