ரௌத்திரம் பழகு பெண்ணே

ரௌத்திரம் பழகு பெண்ணே

உன் பார்வையில் குறையிருப்பின்
என் நடத்தையில்
பிழை காண்பாய்...

அதற்கு நான் செவிசாய்ப்பின் என்னை போல் மூடர் எவரும் இல்லை...

பணிக்காக என்னை நான் அர்ப்பணித்து
என்னை காக்க என் கணவன் பெயரை அரணாக்கி

வெற்றியின் படிகளில் நடக்க முயலும் தருணம்-உன் கட்டுக்கதைகள் என்னை தடுப்பின்

என் உண்மை தன்மையால்
உன்னை சுட்டெரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை...

உன் பொய் கூற்றினை நம்ப இப்புவியில் இனியாருமில்லை...

ரௌத்திரம் பழகு பெண்ணே!!!

(பணியின் தருணங்களில் ஊரார் சிலர் பேசும் புரளிகளை மதிக்காமல் நித்தம் மின்னிடும் நட்சத்திர தேவதைகளுக்கு இக்கவி சமர்பணம்)

எழுதியவர் : ஷாகிரா பானு (4-Aug-17, 10:08 pm)
பார்வை : 2096

மேலே