மனம் திருந்த

மாயையை உண்மையென்று நம்பி உலாவிடும் முட்டாள்களே...
உங்களுடைய நிலைகண்டே என்னுள் வருத்தங்கள் அதிகரிக்கிறதே...

தொலைக்காட்சி, அதில் ஒளிபரப்பு...
எதற்காக?
பொழுதுபோக்கின் பெயரில் எவனெவனோ பணத்தை மூட்டைக் கட்டவே...

பரபரப்புச் செய்திகளாம்...
பார்ப்போரை பரபரப்பாக்கி சிந்திக்கவிடாத செய்தி ஊடகங்கள்...

நடிகர்களின் நடிப்பு...
அதையே உண்மையென்று நம்பியே மூடமக்களின் தவிப்பு...

நாடகத்தில் ஒரு பெண் அனுபவிக்கும் கொடுமைக்காக வருத்தமுறுவார் இக்கால மாதர்...
பக்கத்துவீட்டில் கலங்கி நிற்கும் பெண்ணின் துன்பமறியார்...

முட்டாள் நடிகர்களே அருமையாய் ஏமாற்றுகிறீர்களே...
இது தான் காட்டுகிறதே...
ஏமாளிகளை உருவாக்குவதில் இந்த கோமாளிகளின் பங்கே அதிகம்...

விஷம் எங்கிருந்தாலும் அதைக் கண்டறிந்து தூற்றுவேன்...
துஷ்டத்தனமான பொழுதுபோக்கைவிட்டு வெளியே வாருங்கள்...

நாடகங்களின் மூலம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாய் மனித மனதில் ஏமாற்றுவதற்கும், சந்தேக மனப்பான்மையையும் தூண்டிவிடும் கதாசிரியர்களும் நடிகர்களுமே அதிகம்...

மதிகெட்டோராய் சிந்திக்காமல் வாழ்க்கையை அற்ப மாயைகளில் வீணடிக்கும் வீணர்களே மனம் திருந்துங்களே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Aug-17, 9:07 am)
Tanglish : manam thiruntha
பார்வை : 1245

மேலே