நட்புக்கு வாழ்த்து

நட்புக்கு வாழ்த்து

ஐந்து வயதில்
சுதந்திரமாய்
சிந்திக்க
கற்றுத்தருவது
நட்பு.......

பெற்றோரின்
தடுப்புவேலி
ஆசிரியரின்
கண்டிப்பு

எனது உற்சாக
துள்ளலுக்கு
வடிகாலே
நட்பு

ஆரம்ப பள்ளியில்
ஆரம்பிக்கும்
நட்பு

ஆன்மா
அடங்கும்வரை
தொடர்வதிந்த
நட்பு

தீமையின்
முதல் எதிரி
நல்ல நட்பு

நன்மையின்
முதல் எதரி
தீயநட்பு

பிரித்துப்பார்த்து
பழகத்தெரியாது
அது நட்பு

பாட்டும்
விளையாட்டுமாய்
ஆரம்பித்த நட்பு

பாசாங்கு
தெரியாதது
நட்பு

ஜாதிமதம்
பார்க்காது
நட்பு

ஏற்ற இறக்கம்
பார்க்காது
நட்பு

இன்னலை
போக்குவது
நட்பு

என் புன்னகையில்
தன் உளம் குளிர்வது
நட்பு

இணை வந்த பின்னே
சிறு சுணக்கம்
காண்பது நட்பு

சுயதேடல்
சுழற்ச்சிகளில்
திசை பிரியும்
நட்பு

முகத்தோற்றம்
மாறினாலும்
இளவயது அகத்தோற்றம்
முகத்தில் தெரிந்தால்
அதுதான் என் நட்பு

காலம்கடந்த
சந்திப்பில்
முகத்தில்
சோலைப்பூக்கள்
மலர்வது நட்பு

முகநக நட்பித்து
முடிவில்லா அறவுரைத்து
முகத்தின் பின்னே
உமிழ்வதா நட்பு?

வாழ்வின் விளிம்புக்கு
சென்ற பின்பும்
வாழவைத்து
பார்ப்பதுவே நட்பு

வள்ளுவனின் "இடுக்கன் களைதல்"
இன்று உயிரோடு இருக்கிறதா?
இருந்துவிட்டால்
அதன் பெயரே நட்பு
அதன் பெயரே நட்பு
***********
உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு
குறள்......


Close (X)

5 (5)
  

மேலே