நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

முகமறியா முகங்களுக்கும்
அகமறிந்த நண்பர்களுக்கும்
முகநூல்வழி நட்புகளுக்கும்

பழகிடும் நண்பர்களுக்கும்
பழகிட்டு மறந்தவர்களுக்கும்
பழக்கமிலா முகங்களுக்கும்

என்னுடன் இணைந்து
பயணித்த ,
பயணிக்கும் ,
பயணிக்கவுள்ள
நண்பர்கள் அனைவருக்கும் ...

அன்பு நெஞ்சுடன்
உள்ள நிறைவுடன்
மகிழ்ச்சிப் பொங்க
இதயம் குளிர
வாழ்த்துகிறேன் ...

நலமுடன் மகிழ்ச்சியுடன்
குறையின்றி நிறைவுடன்
நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட
வாழ்த்துகிறேன் ...

#நண்பர்கள்தின #நல்வாழ்த்துக்கள் ..!!!!!

பழனி குமார்
06.08.2017

எழுதியவர் : பழனி குமார் (6-Aug-17, 9:24 am)
பார்வை : 645

மேலே