காதல் தோல்வி எனக்கு இல்லை

ஆணவ நிலவே
ஆணவ நிலவே
அழிவது நீதானே- ஓடி
ஒழிவது நீதானே.
நீ வந்தா என்ன...
போனா என்ன...
எனக்கென்ன கவல-நீ
கணக்குல வரல...
விட்டு சென்றவளே
விரட்டி பிடிக்க- என்
வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல..!
தோற்ற காதலை
தோன்டி எடுக்க- என்
இதயம் ஒன்றும் கல்லறை அல்ல..!
உளி பட்ட கல்லில்
உருவம் தெரியும்
வலி பெற்ற காதலால்
வாழ்க்கையே அறிந்தேன்..!
அலையில்லா கடலிலும்
அழகு தெரியும்
நிலையில்லா காதலால்
நிரந்தரம் அறிந்தேன்..!
நிலவில்லா இரவில்
நித்திரை வராதா..?
மலரில்லா செடிகள்
மண்ணிலே வாழாதா..?
பாலைவன நாட்டில்
பனிமழை போல
வாடிய வாழ்க்கையிலும்
வசந்தங்கள் பொழியுமே..!
என் வாடிய வாழ்க்கையிலும்
வசந்தங்கள் பொழியுமே..!