உன் யோசனை என்ன

வீட்டு ஊஞ்சலில் ஓய்யாரம் ஒய்வெடுத்த மலர் பாதம் தெரியாத தென்றல்.

உன் யோசனை என்ன ? என்று என்னிடம் வினவினால் நான் உனக்கு ஆயிரம் பதில்களை சமர்பிப்பேன்.

பூக்களில் ராணி என்று வர்ணிக்கபடும் ரோஜாவால் பொறாமை கொண்டிட்ட காரணம் உயிருள்ள ரோஜா நீயோ....

உன் அழகின் பசுமைக்கு என்னிடம் கேள்வி உண்டு அதை உன்னிடம் கேட்க தவிப்புடன் யாசிக்கிறது என் இதயம்; நீ மட்டும் பதிலளித்தால் பாலைவனத்திலும் பயிரிடுவேன்.
அது எப்படி என்று நீ கேட்டால் உன்னை சுற்றியும்,அணிந்திருக்கும் ஆடையையும், உன்
ஆடைக்குள்ளே ஒளிந்திருக்கும் உன் உள்ளமும் இதற்கு தகுதி சான்று....,

உன் விடையை சீக்கிரமே சொல் என்று உன்னிடம் கேட்டேன்.
#நீ "யோசிக்கிறேன்" என்றாய்.
#நான் "யாசிக்கிறேன்" என்றேன்.

#மெளனம் பேசியதே

எழுதியவர் : கவிக்கு புதியவன் (7-Aug-17, 10:31 am)
Tanglish : un yosanai yenna
பார்வை : 514

மேலே