என்ன பார்க்கிறாய்

என்ன பார்க்கிறாய் ?

திடீரென்று
கண்ணுக்குள் குதித்துக்
கனவைப் பறிக்கப்
பார்க்கிறாயா ?

குதிக்கும் போது
நீயே கனவாகிவிடுவாயே
என்ன செய்வாய் ?

உயிரைப் பறிப்பாயோ ?

பறிக்கும் போது
விரல்களே
வேர்களாகிப்போனால்
எப்படிப் பறிப்பாய் ?

தோற்றுப் போவாயா ?

எங்கேயும் நான்
ஜெயிக்காத போது
எங்கே நீ
தோற்பாய் ?

விடை தேடப்
பார்க்கிறாயா ?

விடையாகிப்
பார்க்கிறாயா ?

என்ன பார்க்கிறாய் ??

*****

எழுதியவர் : நவீன் இளையா (9-Aug-17, 4:42 am)
பார்வை : 139

மேலே