கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-07

.....கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்.....

காதல் துளிகள் : 07

31.மழையில் நான் உன்னோடு
நனைகின்ற பொழுதுகளில்
குடைக்குள் என் இதழ்களும்
உன்னோடு இணைந்தே
நனைந்து கொள்கின்றன...

32.கடிதங்களில் நீ அனுப்பி
வைத்த காதல் முத்தங்களால்
என் வீட்டு தபாற்பெட்டியும்
வெட்கத்தில் செந்நிறமாய்
உருமாறிக் கொள்கின்றது...

33.நீ அனுப்பிய வாழ்த்து
மடல்கள் முழுதும் உன்
காதல் முத்தங்களின்
கையொப்பங்கள் சிதறிப்போய்
கிடக்கின்றன...

34.என் வீட்டு நிலைக்கண்ணாடி
பார்க்கின்ற வேளை முழுதும்
பக்கம் பக்கமாய் நம் காதலை
இதழ்கள் வழியே வரைந்து
செல்கின்றது...

35.என் தேநீருக்குள் நீ சேர்த்து
வைத்த முத்தங்களால்
மருதாணியின்றியே என் கரங்கள்
சிவந்து சிரிக்கின்றன...

எழுதியவர் : அன்புடன் சகி (9-Aug-17, 4:25 am)
பார்வை : 430

மேலே