உள்ளத்தில் கீறல்

உள்ளத்தில் உளிகொண்டு
குத்துகிறாய்.....
உயிரே உன்நினைவில்
என்னுயிரும்
சாகுதடி.....!!
கண்ணுக்குள்
வாழும்
கண்மணியே.....மண்ணுக்குள்
போனாலும்
மறவாது
உன்நினைவே.....!!
கனவுகளும்
தூரமாய்
போனது......தூக்கங்கள்
தொலைந்தே
போனதால்.....!!
சோகத்தை
சுகமென்று
கதைசொன்ன
காலங்கள்.....தனிமையின்
நீளத்தில்
தவறென்று
ஆனதடி......!!
விடிய விடிய
விழியோடு
பேசிய
விழிகள்.....விதியென்று
சொல்லி.....
விடை பெற்றுப்
போனதடி......!!
காரணமின்றி
காணாமல்
போக......உள்ளத்தில்
காதல்
வந்தாலே.....போதுமென்று
காரணம்
தந்தாளே.....!?!?
காற்றின்
இடைவெளிகள்
இதயத்தை
இடை நிறுத்தப்
பார்க்குது.....இது
என்ன
எனக்கு.....இதயமே
என்றானவள்
எனக்கில்லை
என்றானபின்பு......!!