மேகத்துக்கும் தாகம் உண்டு
விரும்பும் இடத்தில்
பொழியும் மேகம் நான்
எனக்கு
வேலிகள் கிடையாது
பெய்யலாம்
பெய்யாமல் போகலாம்
கட்டளையிடமுடியாது
பாலைகளில் சிலநேரம்
என்னை இழப்பேன்
கடல்களில் இறங்கியும்
காணாமல் போவேன்
வேர்களுக்கு
விருந்தாவதில் விருப்பம்
குட்டையில்
கால்நடைகளின்
குடிநீராவதில்
வருத்தமில்லை
கீழே போவதும்
மேலே வருவதும்
விளையாட்டு
நிறையப் பெய்தாலும்
பெய்யாமலே போனாலும்
தீட்டுவீர்கள்
திட்டுகள் எனக்கு
தேவாமிர்தம்
அப்படியே குடிப்பேன்
அகிலத்தீரே !
@இளவெண்மணியன்