வாகனமாய் வருவான் "எமன்"
அரைகுறையாக கற்று ,
தலைகீழாக நடக்கும் வாகன ஓட்டிகளே !!!
உங்கள் திமிர்யேடுக்க உங்களை நோக்கி அதிவேகமாக வருகிறான் கருப்பு எமன் ...
பூமியை அளந்து பார்க்கும் அடிகோல் இதுவோ ,
இக்கருப்பு நதியை பூமியில் ஓட விட்டு அதன்மேல் படகுச்சவாரி செய்யும் வாகன ஓட்டிகளே !!!
உங்களை கவிழ்த்து ,உங்கள் உயிர்யேடுக்க வருகிறான் கருப்பு எமன்...
மதியின்றி ,கவனமின்றி ,நேரத்தை மிஞ்சும் வேகத்தோடு பயணிக்கும் முட்டாள்களே !!!.
உங்கள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வருகிறான் கருப்பு எமன்...
மனிதர்களே உஷார் !!!! கவனத்தோடு செல்லுங்கள் ,கருப்பு எமனை வென்றிடுங்கள்..