மழை
ஒரு குடம் குடிநீருக்காய் அல்லாடும் மக்கள்
அரசிடமும் தண்ணீருக்காய் மன்றாட
நீரேதும் கிடைக்காமல் போக
மனம் நொந்து கடல்தான் இனி நம்
புகலிடம் என்று கடற்கரை வந்தடைந்தனர்
மணலில் மண்டியிட்டு கடலை நோக்கி
தங்கள் நியாயமா கோரிக்கையை
கூட்டுத் தொழுகையாய் வைத்தனர் இப்படியாக
"கடல் நீரே .நீதான் உலகில் வந்த முதல் நீர்
வெறும் உப்பை கரிக்கும் உன் நீரை
நீயோ கடல் மாயா ஆதவனை காதலித்து
அந்நீரை ஆவியாக்கி நன்னீராய் ,குடிநீராக
மழை............... நீராய் ஆக்குகின்றாய்
ஏனோ, தெரியவில்லை, நீ அந்த கதிரவனோடு
ஊடல் கொண்டாயோ தெரியலையே
மக்கள் நாங்கள் நா வறண்டுபோக
குடிநீர் கிடைக்காது அலைகின்றோம்,
எங்கள் கண்ணீரும் உன் நீர்போல்
கரித்து ஆறாய் ஓடுதே ..........................
இதைக் கண்டும் நீ வீணா இருப்பதேன்
கடல் தாயே ! இப்போதே ரவியோடு நீ கொண்ட
ஊடலை மறந்து அவனோடு காதல் புரிந்து
உன் நீரை இப்போதே மழை நீராக்கி
எங்களுக்கு மழை தாராயோ கடல் மாயி
ஏழை எங்களுக்கு நீ தான் இனி கதி தாயே
தாமதம் செய்யாது எங்கள் பிரார்த்தனையை
ஏற்றுக் கொள்வாய் எமக்கருள்வாய் தாயே "
என்று வணங்கினர் கூட்டாக ........................
அரசு கைவிட்டாலும் ஆண்டவன்
கை விடவில்லை
கடல் மாயி கடல் மாதா இறங்கிட
அன்று மாலைப்பொழுதில்
கருமா மேகங்கள் போர்க்கோலம் போட்டு
இடி முழங்க மின்னல் மின்னிட
ஊரே கொண்டாட மழை கொண்டுவந்தது
ஏழைகள் வயிற்றில் பால் வார்க்க
வான் பொய்ப்பதில்லை இது
ஆன்றோர் வாக்கு !