கூலித் தொழிலாளி
பேருந்தில் பார்த்தபோது மெட்ரிக் பள்ளியில் இருந்து மூன்று மாணவர்கள் ஏறினார்கள்.ஒரு ஆபிஸர் மகன் தேசியக் கொடியை சுருட்டி வைத்திருந்தான்.ஒரு கரைவேட்டி கட்டிய மனிதனின் மகன் தேசியக் கொடியை கவிழ்த்தவாறு பிடித்திருந்தான். இரண்டையும் பிடிங்கிக் கொண்டு போனான் ஒரு கோட் சூட் போட்ட முதலாளி மகன் யாரிடம் எப்போது எதை கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்வேன் என்ற சமிஞையோடு அடுத்த நிறுத்தத்தில் ஏறினான் கூலித் தொழிலாளியின் மகன் வீட்டுக்குச் செல்லும் வரை கசங்காமல் அதன் மேல் கைவைத்துக் கொண்டே சென்றான்.
அவனைக் கண்டு மற்ற மூன்று மாணவர்களும் பெற்றோரும் நையாண்டி சிரிப்பு சிரித்தனர்.வெறும் சுதந்திர உணர்வு என்ற பேரில் கொடியை சுமந்து செல்லும் இளைஞர்கள் வெறுமனே
இருக்கும் நாம் தான் என்பது போல நெஞ்சை நிமிர்த்தி நின்றார் கூலித் தொழிலாளி.
காவி உடை அணியாமல் அந்த உணர்வுடன் மத்திய அரசின் பெருமை பேசிவந்தார் பூணூல் அணிந்து வந்தவருடன் ஒருவர். பெண்கள் நான்கு பேர் கிருஷ்ண ஜெயந்தி பற்றி
பேசி வந்தனர். வயதான சுதந்திர போராளி ஒருவர் தன் அருகில் இருந்த மற்றொருவரிடம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இரண்டு பெண்கள் குழந்தை பெற படும் பாடு நமக்குத் தான் தெரியும் என்று புலம்பி வந்தனர். பக்கத்தில் இருந்த ஒருவர் நாளிதழை திறந்து படித்தார். 63 குழந்தைகள்
பலி என்று... முன்னால் அமர்ந்திருந்த தமிழ்த்தேசியவாதி தமிழ் தேசியம்தான் தீர்வு என்று சொல்லிக் கொண்டிருந்தார். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இங்கு யாரும் பிரிவினைவாதியல்ல.
கருத்துக்கள், கொள்கைகள் மாறுபடுகின்றன பன்முகத்தன்மையை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இளைஞர்கள் வர வேண்டும் என்று, ஆபிஸர் எழுந்து சொன்னார். ஏன் குண்டர் சட்டத்தில் உள்ளே போகவா?,காவி ஆடை அணியாத காவி சொன்னார் தேசத் துரோகி என்று, தமிழ்த் தேசியவாதி சொன்னார் ரஜினிகாந்துடன் சேர வேண்டும் என்று, கரை வேட்டி கமல்,ரஜினி எல்லாம் நடிகர்கள் மட்டும் தான் என்று சொன்னார் கரை வேட்டி, பூணூல் அணிந்திருந்தவர் துஷ்டன் என்றார். கோட் சூட் அணிந்திருந்தவர் பாட்டுக்கேட்டுக்
கொண்டே முதல்ல வீட்டுக்குப் போங்க என்றார். கூலித் தொழிலாளி சுதந்திரப் போராட்ட தியாகியிடம் கேட்டார்
எப்படி 63 குழந்தைகள் இறந்துச்சு?
சுதந்திரப் போராட்ட தியாகி ஒரு நிமிடம் கண்ணீருடன்
"சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டாயிற்று ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இருந்து மீண்டுவிட்ட நமக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் படுகொலை நடத்தியதில் 63 குழந்தைகள் பலியான சம்பவத்திலிருந்து மீளமுடியவில்லை. சுதந்திரம் அடைந்து விட்டோம்
நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று மட்டும் கொண்டாடமல் யாரிடமிருந்து என்ற கேள்வியோடு கொண்டாடுங்கள்."
என்றார்.
பேப்பர் படிப்பவர் அடுத்த பக்கத்தில் இருந்த செய்தியை படித்தார் "கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகள் வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்தது" கூலித்தொழிலாளி அதிகாரியிடம் கேட்டார் "ஏன் சார் உண்மையிலேயே அதிகாரிங்க தப்பு பண்ணலையா?" அதிகாரி எனக்குத் தெரியாது,அரசியல் வாதி பணம் கொடுத்தா சில அதிகாரிகள் இப்படித்தான் பண்ணுவாங்க.கூலித்தொழிலாளி அதிகாரியிடம் சார் மனசாட்சியத்தொட்டு
சொல்லுங்க நீங்க லஞ்சம் வாங்குனது இல்லையா?அதிகாரி,கேவலம் நீ கூலித் தொழிலாளி என்ன கேள்வி கேக்குறியா?
பேப்பர் படிப்பவர் அடுத்தப் பக்கத்தில் விவசாயி டெல்லியில் போராட்டம் என்று படித்தார்.கூலித் தொழிலாளி கரை வேட்டியிடம் ஏன் சார் இப்படி பண்றீங்க கேட்டார்.அது எங்களுக்குத் தெரியாது டெல்லிட்டதான் கேக்கணும் சொல்லிட்டாரு.கூலித்தொழிலாளி டெல்லிக்கு ஆதரவாக பேசிய காவி அணியாத காவியிடம்
ஏன் சார் இப்படி? கேட்டார்.அதற்கு நீ தேசத் துரோகி என்று கூறி போய் விட்டார்.கூலித் தொழிலாளி தமிழ் தேசியம் பேசியவரிடம் சென்று கேட்டார் ஏன் இப்படி யெல்லாம் நடக்குது? தமிழ்த்தேசியவாதி "சிஸ்டம் சரியில்லை" அதற்குத்தான் ரஜினிகாந்த் வரணும்.கூலித் தொழிலாளி கோட் சூட் போட்டவரிடம் ,சார் சிஸ்டம்
சரியில்லைனா நீங்க மட்டும் எப்படி சார் .இப்படி இருக்கீங்க? கோட் சூட் போட்டவர் இங்க ஆட்சி மத்தியிலும் ,மாநிலத்திலும் சரி.சார் அப்ப எங்கள பாத்தா உங்களுக்கு பரிதாபமா இல்லையா உங்களுக்கு பரிதாபம் பாத்தா எங்க வேலை எப்படி நடக்கும்? அந்த அங்க உக்காந்துருக்க ஆபிஸர் எங்க கம்பெனிலதா வேலை செய்றாரு.
கூலித் தொழிலாளி சாமி ,பூணூல் அணிந்தவரிடம் நீங்க கடவுள் கிட்ட எதாவது வேண்டக் கூடாதா? பூணூல் அணிந்தவர் "இதற்குத்தான் எங்கவாள் அப்பையே மனுதர்மம் எழுதி வைச்சுருக்கா, இப்ப பாத்தியா சூத்திரன் நீ யெல்லாம் கேள்வி கேக்குற அளவுக்கு கலி காலம் ஆயிடுத்து". பன்முகத்தன்மை பேசியவரிடம் கூலித்தொழிலாளி சென்று இதுதான் உங்க பன்முகத்தன்மையா சார்? என்று கேட்டார்.கூலித் தொழிலாளி பேப்பர் படிப்பவரிடம் சென்றார்
சார் நீங்க இதையெல்லாம் கேக்க கூடாதா?"நான் எப்படிங்கோய் கேப்பேன் நான் புரட்சி பேசுற கட்சில தான் இருக்கேன் எனக்கு கீழ எத்தனையோ பேர் புரட்சி அது இது பேசிட்டு இருக்கானுங்க அவனுங்கள அதெல்லாம் பண்ணக்கூடாதுதானங்கோய் எங்க கட்சில தலைமை பதிவியெல்லம் எங்காள் பாத்துக்கிறா"
கூலித் தொழிலாளி இறங்க வேண்டிய இடம் வந்தது,தனது மகனிடம் "மகனே நீ இந்தியாவை கொடிக்குள் வைத்து பாதுகாத்தது போதும் கொடிக்குள் இருக்கும் இந்தியாவை இந்த காவிக்ககூட்டத்திடம் இருந்தும்,இந்த போலி பன்முகத்தன்மை ஜனநாயகத்திடம் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீ அதிகாரியாக ஆக வேண்டாம் பணம் கிடைக்கும் தொழில் அதிபரை தாஜா பண்ணும் நிலைமை வரும்,நீ அரசியல் வாதியாக ஆக வேண்டாம் 10 மடங்கு பணம் கிடைக்கும் மக்களை ஏமாற்றலாம் ,நீ தொழில் அதிபராக ஆக வேண்டாம் நீ எல்லாருக்கும்10 மடங்கு பணம் கொடுக்கலாம் மறைமுக ஆட்சி மற்றவர்களை சிதைத்து நடத்தலாம்.நீ மதவாதியாக ஆக வேண்டாம் வெறி பிடித்து மற்றவர்களை துன்புறத்தத் தோன்றும்,நீ போலி தமிழ்தேசியவாதியாக வேண்டாம் உனக்கு தெளிவான சிந்தனையில்லாமல் நடிகர்களை ஆதரிக்கும் நிலை வரலாம்,நீ அர்ச்சகர் ஆக வேண்டாம்(ஆக விடமாட்டார்கள்)மனுதர்மத்தை வைத்து நீ நினைத்ததை மற்றவர்களை மனதாலும்,உடலாலும் துன்புறுத்தத் தோன்றும்,நீ சுதந்திர போரட்டத் தியாகி ஆக ஆசை உனக்கு வர வேண்டாம் அது உனது உணர்ச்சியைத் தூண்டி உன்னை காவிக்கூட்டதினுள்ளே அல்லது போலி பன்முகத்தன்மைக்குள் தள்ள நேரிடும்.நீ புரட்சி செய்ய வேண்டாம் அங்கு இருப்பவர்கள் உண்மையானவர்கள் வெகு சிலரே. நீ "நீ யாக இரு.ஒரு வேளை கஞ்சி குடிச்சாலும் சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் கடைசி வரை இரு எக்காலத்திலும் அதை
சமரசம் செய்யாதே அது போதும் என்றார்".