என் சுவாசக்காற்றே

என் சுவாசக்காற்றே
என் உயிரென கலந்து
போன சுவாசமே
என் உள்ளத்தில் உதித்த
உன் அன்பை
என் இமையில் மூடி புதைத்து வைக்க போகிறேன்
என் மனம் உன் காதலின் ஆழத்தை உணரட்டும் என்று
நீ ஓடி மறைந்து சென்றுவிடாதே
உன்னிடம் நான் கண்ட அன்பை வேறு எவரிடமும்
நான் என்றுமே உணர்ந்ததில்லை அன்பே
அதனால்
உன் அன்பு சுவாசத்தில் ஏங்கி
தத்தளித்தது இதயம்
என் மனதில் உன் சுவாசம் கரு கொண்டதால் குழந்தையானேன்
என் சுவாசக்காற்றே
எது வேண்டுமென்றாலும் தொலைத்து விடுவேன்
உன் அன்பு சுவாசத்தை மட்டும்
தொலைக்காமல்
உயிர் என கொள்வேன்

எழுதியவர் : காலையடி அகிலன் (17-Aug-17, 10:03 am)
Tanglish : en suvaasakkaatrae
பார்வை : 760

மேலே