வைராக்கியமுடைய பெண்

தன்னுயிர் காதலனிடம் தன்னைப் பறிகொடுத்து ஏமாந்து தன்மானத்தால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பெண்களைப் போல் தன்னுயிரை மாய்க்காமல் தன் வயிற்றில் வளரும் சிசுக்காக ஜீவகாரூண்யத்தோடு தாய்மை மேலிட,
சமூகத்தின் பழிச்சலுக்கு அஞ்சாமல் குழந்தையை வளர்த்து இடுப்பில் இடுக்கிக் கொண்டு செல்லும் அவளை எல்லோரும் நடத்தை கெட்டவளென்று இழித்துரைத்தார்கள்.

உண்மையில் அவளொரு உத்தமி.
பத்தினி தெய்வம்.
காதலால் மனதில் நினைத்தவனைத் தவிர வேறு ஆண்மகனைக் கனவிலும் நினையாத கற்புத்தீ.

அவளது வைராக்கியத்திற்கு முன் எந்தவொரு ஆண்மகனும் தோற்றுப்போவான்.
தன் மகனை வளர்க்க வெளியூர் சென்று கிடைத்த வேலையைச் செய்து தனது குழந்தையை படிக்கவும் வைக்கிறாள்..
தன் மகன்
சமுதாயத்தில் உயர் நிலையைப் பெற,
கண்களால் களவாடும் பல ஆண்களுக்கு மத்தியில் அஞ்சாத நெஞ்சாய் உழைத்து வாழ்ந்த அவளை அடங்காப்பிடாரியென்றும், அரக்கியென்றும் அழைத்தோர் பலருண்டு..

யாவும் சகித்து இன்னல்களையெல்லாம் கடந்து மகனை வளர்த்து ஆளாக்கி,
உயர் பதவியை வகிக்கச் செய்து ஆனந்தக் கண்ணீருடன் மடிகிறாள் அத்தாய்...

ஏமாந்தாலும் தனித்து நெறி தவறாமல் வாழ, தன்னம்பிக்கையும், வைராக்கியமும் இத்தாய் போல் வேண்டும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Aug-17, 9:25 pm)
பார்வை : 527

பிரபலமான விளையாட்டுகள்

மேலே