முள்மரம்

முள்மரம்

தன் கிளைகளை
அகல விரித்து
கொல்லைப் புறத்தை
தனதாக்கிக் கொண்ட
முள்மரம் ஒன்று . . .

தன் காலடியில்
முள்பரப்பி
தன் நிழலுக்குக்
காவலாய் . .

அப்புறப்படுத்திவிட
அக்கம்பக்கத்துப்
பரிந்துரைகள் . . .

துணிகின்றேன்
காரியத்தில்
ஏதோ . . .
ஒன்று நெருங்காது
தடுப்பதாய் . .

பல்வண்ண பட்சிகளின்
கூட்டினை கையிலேந்தி
அடைக்கலமாய் நிற்கிறதே
அந்த கருணையா! . . . . .

தேனடையைச் சுமந்திருந்தும்
திருடி ருசிக்க
எத்தணிக்கா
அந்நற்பண்பா . . .

பயிர்களைத்
தழைய விட்டு
வேலியாய்
காய்ந்து மடிகிறதே
அந்த சுயநலமின்மையா . . .

தூக்கமுடியா
மனச்சுமையில்
திரும்புகிறேன்
வெறுங்கையோடு
ஏதோ . . . .
ஞானம் பெற்றவனாய் . . . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (19-Aug-17, 7:49 pm)
பார்வை : 120

மேலே