அழகிய ஞானப்பெண்ணே

எழுத எண்ணி எழுதுகோலை எடுக்கும் போதெல்லாம்,
எண்ணத்திலொரு உதயமாய் நீ தோன்றி என்னை எழுத்துவிக்கும் விந்தையை எண்ணி எண்ணி சிந்தை வியக்கின்றேன் ஞானப்பெண்ணே...

நீரிலில்லா பாலைவனத்துள் தனித்திருந்து எழுதிய என்னை ஞான மிதிவண்டியிலேறி நீர்மிகு சதுப்பு நிலத்திற்கு பயணிக்கச் செய்து நாற்காலியும், மேஜையும் போட உட்கார வைத்து புதுபுது அர்த்தங்களாய் வாழ்வியல் சத்தியங்களை எழுதுவிக்கிறாய் ஞானப்பெண்ணே...

உனது கள்ளமில்லாச் சிரிப்பும், கலங்கமில்லா எண்ணங்களும் என் முகத்தில் பிரதிபலிக்க வைக்கும் உன் வித்தையின் உள்ளர்த்தமென்ன அழகுக்கெல்லாம் அழகாகிய ஞானப்பெண்ணே?...

சந்தேகங்களையெல்லாம் வேரறுத்து சஞ்சலங்களையெல்லாம் போக்கி,
பயமுக்தி தந்து பாவத்தின் விமோசனமாய் ஜென்மசாபம் தீர்த்து வைத்தாயே ஞானப்பெண்ணே...

மழலை மொழியொத்த உன் குரலால்,
இருதயம் பரவசமடைந்து,
சத்தியத்தில் நிலைப்புக்கொள்ளும் உண்மையின் வழியில் எனது தேடல்களுக்கெல்லாம் நானுணர்ந்த ஞானத்தின் ஒட்டுமொத்த உருவாய் ஒப்பற்ற துணையாய் நானே உன்னைப் படைத்தாலும் நீ இயற்கையின் சக்தியாய் உருவெடுத்துவிட்டாயே ஞானப்பெண்ணே.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (20-Aug-17, 6:51 pm)
பார்வை : 396

மேலே