என்ன தவம் செய்தேன்

என்ன தவம் செய்தேன் !
கவிதை by:கவிஞர் பூ.சுப்ரமணியன்


பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்
இரு கண்ணெனப் போற்றும்
இதயமுள்ள மக்களைக் காண
என்ன தவம் செய்தேன் !

வாடிய பயிரைக் கண்டவுடன்
வாடும் முகங்களைக் கண்டு
நாடும் மக்களைக் காண
என்ன தவம் செய்தேன் !

உடல் கவர்ச்சியில் மயங்காமல்
உள்ளத்தை நேசிக்கும்
உண்மைக் காதலரைக் காண
என்ன தவம் செய்தேன் !

இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்யும்
இனிய உள்ளங்களைக் காண
என்ன தவம் செய்தேன் !

ஏர் பிடிக்கும் உழவனை
தேரில் வரும் மன்னன்போல்
மதிக்கும் மக்களைக் காண
என்ன தவம் செய்தேன் !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (21-Aug-17, 8:31 pm)
பார்வை : 237

மேலே