நம் தனித்துவம் என்ன

தனிமையே சிறந்ததென்று தனிமையை நாடிச் செல்லக் காரணமாய் பல அனுபவங்கள் படைசூழ வந்து இதயத்தில் சூராவளியைக் கொந்தளிக்கும் நேரம் தனிமையாய் எத்தனை காலம் வாழ்ந்திடுவாய்? என்ற கேள்வியை எழுப்பி தனிமையின் மனக்கோட்டையை தகர்த்தெறிந்தார் அந்த அன்பு சகோதரி...

உதவிடும் மனப்பான்மை உன்னுள் இருந்தாலும் அவ்வுதவியைப் பெற உன்னைச் சுற்றி நால்வராயினும் வேண்டுமே...

உணவைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் நால்வாராவது வேண்டுவது போலே இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள நால்வராயினும் வேண்டுமே...

தனிமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட எண்ணிய நேரம் துரோகமில்லா அன்புள்ள நிரந்தரச் சுற்றம் கிடைக்குமா? என்று அறிவு குறுக்கு விசாரணையைத் தொடங்க தனிமை அழியாது தொற்றிக் கொண்டது மீண்டும்...

வன்மமில்லா கூட்டமொன்று வேண்டுமென்ற நேரம் நாம் பேசும் வார்த்தைகளில் சந்தேகிக்கும் கூட்டமே சூழ்ந்திருக்கக் கூட்ட மனப்பான்மை மீது மீண்டும் வெறுப்புத் தட்டுகிறது தானியங்கு விசையாய்...

ஆம், நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்கிறோமே...
நம் தனித்துவம் தானென்ன??
எதை நோக்கி ஆட்டுமந்தையாய் பயணிக்கிறோம் நிறைபெறாத மாந்தர்களாய்???...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Aug-17, 8:29 pm)
பார்வை : 1623

மேலே