நாய் குட்டி விசரி

நாய் குட்டி விசரி

இலங்கையில், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற பிரதானநகர்களை விட, சிறுநகர்களில் 151 மணிகூட்டுக் கோபுரங்கள் உண்டேன்றால் நம்பமாட்டீர்கள். இந்த திட்டம் காலம் சென்ற ஜனாதிபதி பிரெமதாசாவால் செயல் படுத்தப் பட்டது. கரரணம் நேரத்துக்கு எதையும் சைய் என்பதை மகக்களுக்கு நினைவூட்;டவே, ஆனால் அவைற்றில் 15 கோபுரங்களில் உள்ள கடிகராங்கள் மட்டுமே சரியான நேரத்தைக்காட்டும். கொழும்பில் 3 மணிகூட்டுக் கோபுரங்கள் உண்டு. அதில் 20 ஆம் நூற்றாண்டில் பம்பாய் பார்சி இனத்து வர்த்தகர் ஒருவரால் நிறுவப்பட்டது கான் மணிக்கூட்டுக்கு கோபுரத்தை (Khan Clock Tower) பெட்டடாவுக்கு போவோர் காணத் தவற மாட்டார்கள். அதே போல் யாழ்ப்பாணத்து மணிகூட்டடியை தெரியாதவர் யாழ்ப்பாணத்தில் இல்லை சென்ட்ரல் சென் ஜோன்ஸ் வருடாந்த கிரிக்கட் மட்ச் நடப்பது மணிகூட்டடியில் உள்ள மைதானத்தில். இக் கோபுரம் 1829 இல் ஆல்பர்ட் எட்வர்ட் இளவரசர் யாழ்ப்பாணம் வந்த போது அந்தக் காலத்தில் ஆறாயிரம் ரூபாய் செலவில் நிறுவப் பட்டது’

இவ்வாறு ஒவ்வொரு மணிகூட்டுக் கோபுரதுக்கும் வரலாறுஉண்டு. அதேபோல் யாழ்ப்பாணத்து மணிகூட்டடி, அழகம்மாவுக்கு அபயம் கொடுத்தது பலர் நினைவுகளில் இடம்பெற்றது.. பெயருக்கு எற்ற அழகியாய் இருந்தவள் அழகம்மா. வேம்படியில் பிரபல இரண வைத்தியர் சாமித்துரையின் ஒரே மகள் அவள். சாமித்துரையின் பூர்வீகம் காரை நகர் கடற்படை முகாமிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கும் பருத்தியடைப்பு கிராமம். சாமித்துரை வேம்படிக்கு அருகே உள்ள தன் பெரிய கல் வீட்டில் வைத்து “பருதியடைப்பான்” என்ற அடைப் பெயரில் ரண சிகிச்சை செய்து ஒரு காலத்தில் புகழ் பெற்றவர்

அழகம்மா வேம்படி மகளிர் கலூரியில் படித்து அதே கல்லூரியில் ஆசிரியையானவள். அவளின் உற்றான்மை சினேகிதி வடிவு என்ற விலையுர்ந்த வெள்ளை நிறப் பெண் போமேநேரியன் நாய்குட்டி அழகம்மாவைப் போல் அழகிய இரண்டு வயது நாய்குட்டி. அழகம்மா சொல்வதெல்லாம் அதற்குப் புரியும் அவள். சொல் கேட்டு நடக்கும். வடிவை விட்டு அழகம்மா பிரிய மாட்டாள். இரவில் அவள்கூடவே
கட்டிலில் தூங்கும். வடிவுக்கு இறச்சி என்றால் போதும்

அழகம்மா படிக்கும் போது அவள் மேல் கண் வைக்காத சென்ட்ரல் காலேஜ் மாணவர்கள் இல்லை என்றே சொல்லலாம். கண் அழகி, மூக்கழகி, பல் அழகி, கூந்தல் ஆழகி இப்படி அவளின் ஒவ்வொரு அங்கத்ததையும் பார்த்து ரசித்த வாலிபர்கள் பலர். ஒரு கூட்டம் அவள் வீட்டை அவளின் பார்வைக்காக ஏங்கி சைக்கிளில் மணி அடித்தபடி அடிக்கடி சுற்றி வரும்

அழகம்மாவுக்கு திருமண வயது வந்தபோது பல திருமணங்கள் பேசி வந்தது. பெண் பார்க்க வந்த போது மாப்பிள்ளை வீட்டாரை அவமானப் படுத்தி அனுப்புவாள். தன் அழகுக்கு பொருத்மானவன் நீ இல்லை என்று பெண் பார்க்க வந்த பல மாப்பிள்ளை மாருக்கு தான் அழகி என்ற கர்வத்தோடு சொல்லி இருக்கிறாள்.

ஒருசமயம் ஆரியகுளத்தடியில் இருந்து பேசி வந்த மாப்பிள்ளையின் பெயர் ஜெயந்தன். அவரின் தந்தை ஜெயராசா சில காலம் கேரளாவில் இருந்த படியால் பில்லி சசூனியம் செய்யும் முறையை கற்றவர். பில்லி சசூனியத்தில் நம்பிக்கை உள்ள சில சிங்கள அரசியல் வாதிகளுடன் அவருக்கு தொடர்புண்டு. அவரின் மகன் ஜெயந்தன் படித்து பட்டம் பெற்ற ஆங்கில ஆசிரியர்.. தந்தையின் ஒரே அன்பு மகன். அழகம்மாவை பெண் பார்க்கப் போன போது அவள் அகங்காகரத்தோடு’ அவனோடு பேசினாள்
.
ஜெயந்தனின் சற்று நிறம் குறைந்தவன்.அழகன் என்று சொல்லமுடியாது. இரக்க சுபாவம் உள்ளவன்.
“ நீர் என் வடிவு நாய் குட்டியின் நிறத்துக்கும் அழகுக்கும் கூட ஈடு செய்ய முடியாதவன். என்னை பெண் கேட்டு என்ன யோசனையோடு வந்திருக்கிறீர் . போம். போய் உமக்குத் ’பொருத்தமமான அழகும் நிறமும் குறைந்த பெண்ணை பாரும்” என்று பேசி அனுப்பினாள். அதன் விளவை அவள் அபோது அறிந்திருக்கவில்லை.

“ பிள்ளை நீர் அப்படி பேசி இருக்கக் கூடாது. அந்த மாப்பிள்ளையின் தகப்பன் பொல்லாதவன். அவன் என்ன செய்வானோ தெரியாது என்று சாமித்துரை கவலைப் பட்டார். அவர் பயந்த படி பூசனிக்காய். எலும்பு, தலை மயிர். உற்பட சூனியப் பொருட்களும் இறச்சித் துண்டும் சாமித்துரை வீட்டு ஒரு நாள், வாசலில் வீசப்பட்டிருதது.

அந்த சமபவம் நடந்த சில நாட்களுக்குள். வடிவு பைத்தியம் பிடித்து இறந்தது. அதன் மரணம் அழகம்மாவை வெகுவாக பாதித்தது. சாமித்துரை இறந்த வடிவைப் போல் ஒரு நாய் குட்;டி அழகம்மாவுக்கு சாமித்துரை கொடுத்தும் அதுவும்’ சில வாரங்கள் மட்டுமே உயிரோடு இடுந்தது. கால்நடை மருத்துவர் இறந்த இரு நாய்சளையும்’ பரிசோத்து விட்டு யாரோ நாய் குட்டிகளுக்கு விஷம் கலந்த இறச்சி கொடுதிருக்கிரார்கள் என்றார்

நாய் குட்டிகளின் அடுத்தடுத்த மறைவுகளால் அழகம்மாவின் மனநிலை பாதிப்படைந்து மன நோயாளியானாள். சாமித்துரையின் ரண சிகிச்சைகள் தோல்வியை அந்தித்தது. வருமானம் குறைந்தது. மகளுக்கு வைத்தியம் செய்ய பணம் அவருக்கு இருக்கவில்லை. கவலயில்; ஒரு நாள் மாரடைப்பில் இறந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மனைவி ஆறு மாத காலத்துக்குள் இறந்தாள். அழகம்மா மன நிலை குறைந்த விசரி அனாள். அடிக்கடி வடிவு வடிவு என்று கூவிய படி அவளை சுற்றி உள்ள தெரு நாய் குட்டிகளுக்கு கிடைத்த உணவை கொடுத்து மகிழ்வாள். சிறுவர்கள் அவளுக்கு வைத்த பெயர் நாய் குட்டி’ விசரி. தலை விரி கோலத்தோடு யாழ்ப்பான நகரில் திரிந்தால். சிறுவர்களின் கல்லெறிக் அலானாள். அவள் குளிப்பதில்லை. ஒரே துர் நாற்றம். தேறி’ ஓரங்களில் தூங்குவாள். அவளை யாழ்ப்பாணத்து மணிகூட்டடியில் காணலாம்.
*******
வெளி ஊருக்கு மாற்றலாகி போயிருந்த ஜெயந்தன் சென்ட்ரல் கல்லூரிக்கு அசிரியராக வந்தான். ஒரு நாள் அவன் அழகம்மாவின் பரிதாபா நிலை’ கண்டு தன் தகப்பன் செய்த தவறான செயலை நினைத்து மனம் வ்ருந்தினான். அவனின்; மனைவி சாந்தி யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலை செய்யும் ஒரு மன நிலை வைத்தியர். சாந்திக்கு நடந்தை ஜெயந்தன் சொல்லி அழகம்மாவின் நிலை காண்டு கவலைப் பட்டான். அவளின் உதவியோடு கிளினொச்சியில் உள்ள நவ மங்கை வாசம் மன நோய்’ மருத்துவ நிலையத்தில் அழகம்மாவை’ சேர்த்தான்.
அங்கு அவளுடன் உறவாட நாய் குட்டிகள் கிடைக்காத கவலையில் இரு வருடங்களில் இரண்டாம் மாடியில் இருந்து வடிவைத் தேடி குதித்து அழகம்மாம இறந்தாள். இப்பொது யாழ்ப்பாண மணிக் கோபுரத்தை பார்க்கும் போது அழகம்மாவின் நினைவும் நான் பத்து வயதாக இருக்கும் போது இந்தத் தலைப்பில் ஆறு தசாப்தங்களுக்கு முன் நான் எழுதிப் பாராட்டைப் பெற்ற என் முதல் சிறுகதை கதை என் நினைவுக்கு வந்தது. திரும்பவும் அழகம்மாவுக்கு’ என் சமர்ப்பணம்

*******


:

எழுதியவர் : பொன் குலேன்திரன் –கனடா (22-Aug-17, 3:03 am)
பார்வை : 329

மேலே