உன் தொலைபேசி அழைப்புக்கு

அன்றைய தினம் அவள்
அழைப்பதாய் சொன்னால்,

அலைகளின் கரையில் அமர்ந்திருந்தேன்,
ஒவ்வொரு அலைகளின் முடிவிலும்,
அழையாத நொடிகள் அழைத்துத்து வந்தது
ஆழமான வலிகளை,

சூரியன் இடம் தேடி மறைந்து விட்டது,
எண்ணம் உன்னை தேடி வாடி விட்டது,
கண்ணீர் கரைக்கள் இல்லாததால் வலிந்துவிட்டது,

அழைப்புக்கு நான் காத்திருந்தது போல
அழைக்க அவளும் காத்திருந்தாலோ...!!!
ஆள் இல்லா தருணம் வேண்டி..!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (23-Aug-17, 10:07 pm)
பார்வை : 265

மேலே