கேள்விக்கு என்ன பதில்
இராவணன் விரும்பியதால்
சீதைக்கு தீ என்றால்....
சூர்ப்பனகையின் காமத்திற்கு
ஆளான இராமனுக்கு?
தன்னை இழந்த பின்னும்
தாரம் உரிமை இல்லை
தெரிந்த பின்னும்
மனைவியைச் சூதாடித்
தோற்ற தருமனுக்கு?
முழு முட்டாளாக்கியது
முழுதாய் தொடருகிறதே...
நவீன யுகத்திலும்!