துணையாகவே நிற்பவள்

பெண்ணாக பிறந்தவள்
இந்த பூமியின் பெருமையாக நிலைத்தவள்,அவளே-
பெரும் பாக்கியம் செய்தவள்.
நீர்,நெருப்பு,நிலம்,காற்று,வானம் என எதிலும்
நீங்கமற கலந்து நிலையாக நின்றவள்.
தெய்வமாக தெரிந்தும்,
தெரியாமல் இந்த உலகில் உலாவும் உன்னதமான உணர்வு அவள்.
உயர்வுகளை அடைந்தாளும்,
உறவுகளின் ஊடாக தாழ்ந்தே நின்றவள்.
பெரிய அளவில் பெயர்கள் இல்லை என்றாலும்
பிறரின் பெருமைக்கு
துணையாக நின்றவள்,
துணையாகவே நின்றவள், கடைசி வரை
துணையாகவே நிற்பவள்.

எழுதியவர் : கு.கார்த்திக். (26-Aug-17, 12:02 am)
பார்வை : 114

மேலே