அன்பு

நன்றி என்ற ஒற்றை
வார்த்தையில்
உன்னை அன்னியப்படுத்த
விருப்பமில்லை எனக்கு ...
என்ன சொல்வது
எப்படி செய்வது ...
புரியாமல் தவிக்கிறது
உன் மீதான காதல் ...
என் தாயின் அன்பை
வாரி வாரி வழங்குகிறாய்..
என் தந்தையின் பாசத்தையும்
நேசமாய் தருகிறாய் ...
என் உடன்பிறப்பின் பிரியத்தையும்
மொத்தமாய் தருகிறாய் ...
என் தோழனோடு கைக்கோர்த்து
நடக்கும் உரிமையும் தருகிறாய் ...
நம் குழந்தையின் அன்பையும்
சேர்த்து எனக்கே தருகிறாய் ...
என் மீதான காதலை
ஒவ்வொரு நொடியும்
என்னில் வெளிபடுத்துகிறாய் ..
ஆனால் ...
நான் எப்படி சொல்லுவது ...
என்ன செய்வது ...
மறு ஜன்மத்திலும்
நீயே வேண்டுமென்றா ... இல்லை
உன் தாயாக வேண்டுமென்றா ... இல்லை
உன் சேயாக வேண்டுமென்றா ...
யோசித்து பார்த்தேன்
பதில் ஏதும் கிடைக்கவில்லை ...
எல்லா உறவுகளுக்கும் மேலாக ,
இந்த பிரியம் ...
இந்த அன்பு ..
இந்த காதல் ..
இந்த பாசம் ..
அனைத்தும் கடந்து ,
வாழும் வரை
உன்னை எப்போதும் பிரியாமல் ,
இதே காதலுடன்
இதே அன்புடன்
இதே பாசத்துடன்
திகட்ட திகட்ட
இறுதிவரை
உன்னில் நான்
நானாக வாழ வேண்டும் ....

எழுதியவர் : (26-Aug-17, 6:10 pm)
Tanglish : anbu
பார்வை : 101

மேலே