காதல் பரிசு

காதலுக்கு மரியாதை திரைப் படத்தில்
நிஜவாழ்வில் நடப்பதுவோ விபரீதங்கள்
நடக்காது என்பதை நன்கறிந்தும்
துணிவோடு நடக்கும் காதலர் ஓட்டம்

வருவினை அறியாத முதிர்ச்சியின்மையா
அல்லது காமத்தின் எல்லை கடந்த தூண்டுதலா?
பெற்றவரும் சுற்றத்தாரும் படும் அவமானம்
சிலசமயம் தற்கொலையில் முடியும் பரிதாபம்!

ஊரையோ கொளுத்தும் வெறிச் செயலகள்
மணங்காணும் முன்னே தவறிழைத்து
கர்ப்பம் தரித்து திசைமாறிப் போகும்நிலை
ஊடகத்தில் இலவச விளம்பரங்கள்
உலகறிய வேண்டுமன்றோ இவர்கள் கதையை!

காணொலி ஊடகத்தின் கருப்பொருளே
காதலைக் காட்டிக் காட்டிக் கெடுப்பதுவே.
இலைமறை காயாய் இருந்த காதல்
பொது இடங்களிலும் பலர் காணும் களியாட்டம்!


ஏற்றுக் கொள்ள முடியாத பெற்றோர் சிலர்
இரக்கமின்றி நடத்திடுவார் கௌரவக் கொலையை
அடியாட்களை வைத்து அடித்துக் கொல்லும்
கருணையில்லாப் பெற்றவரும் இருக்கின்றாரே!

காதலின் ஆணிவேரே காம உணர்வு தான்
காமம் தவிர்த்த காதல் கற்பனையில்தான்
பிளேட்டா சொன்ன காதலும் இந்த வகைதான்.
பின்விளைவை அறியாமல் காதலிப்போரே
சிந்திப்பீர் காதலில் வழுக்கி விழுமுன்னே!

---> மீள் பதிவு

எழுதியவர் : மலர் (26-Aug-17, 5:58 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 149

மேலே