நிச்சயிக்கப்பட்டது
உடைந்த உள்ளத்தில் ,
உடையாத நம்பிக்கையாய் ....
உதிர்ந்த பூக்களில் ,
உதிராத மணமாய்.....
கொட்டிவிட்ட அருவியில் ,
கொட்டிவிடாத நீராய்...
நகர்ந்து செல்லும் நத்தையில்,
நகராத நீராய் .....
உண்மைகாதலிலும் உள்ளிருக்கும் காமமாய் .....
பேசிவிட்ட காதலியின் பேசாத மௌனமாய் ....
அடித்துவிட்ட அன்னையினுள் அழுதுகொண்டிருக்கும் அம்மாவாய் ...
உலகம் முடியும்வரை முடிந்திடாத வானமாய்...
உனக்குள் நானே .......... உறைந்திருக்க ...
கலந்திருக்க ....
உன்னுடனே ஏழு ஜென்மம் .... பிறந்திருக்க ...
எழுதப்பட்டுள்ளது ........--- என் இதயத்தில் ...!!!