ஓரிலக்கியம்
எனது நீண்ட நெடிய பயணங்களின்
தொடக்கமும் அவளே...!!
இலக்கும் அவளே..!!
உணர்வுகள் அனைத்தும்- உறைந்து
போகும் அவளின் ஆற்றுதலில்
உவமைகள் தேவையில்லா
உயிரோவியம் அவள்...!!
ஒப்புமைகள் ஏதுமில்லா
ஓரிலக்கியம் அவள்...!!
அவளைப் நான் பார்த்த கணமொன்றில்
அவள் காட்டிய விழியின் மொழியை
என்னவென்பேன்..?? அவளின் புதையல்
நிரம்பிய விழிகளை நான் காண;அவளின்
இமைகள் நடத்திய முற்றுகைப்போரில்
தோற்றுவிட்டேன்......
ஆறதலாய் அவளும் வந்தாள்
அழகிதயம் பரிசாய் தந்தாள்
கல்லூரியும் முடிந்தது
கனவும் நனவாய் கண்முன் விரிந்தது.....
எனக்காய் அவளும்,அவளுக்காய் நானும்
வடித்த கண்ணீரை எண்ணிக்
களிக்கிறோம் இருவரும்....!!!!!
நம் கண்ணீர்,முத்தம் இவற்றை
காற்று உலர்த்திவிடும்........
நம் காதலை காலம் உலர்த்திவிடும்......