கொள்குறி ஆசை
ஒரு கேள்விக்குறி -என்
குருதியை குறிபார்க்கிறது ,,,
உன் பதில் என்னுள்
ஆச்சரியகுறியை ஏற்படுத்திவிட்டால் !!!!
ஆயுள் முழுவதும் நான்
உன் வாழ்வை பெருக்கி ...
வருத்தத்தை வகுத்து .....
உன்னுடன் என் வாழ்வை ..
கூடசெய்வேன் ....
இப்படிக்கு ,
என்றும் உன்னையே நோக்கும்
அம்புக்குறி .....