அறிவொளி
ஒழுக்கமே உயர்ந்த அறம்...
ஒழுக்கத்தின் வழி பயணிக்கச் செய்வதே அறிவொளி...
ஒழுக்கத்துள் எல்லாம் அடங்கியுள்ளது உலகம் போல்...
பிறரை ஏமாற்றுபவன் ஒழுக்க நெறி தவறியவனே...
கொலைகள் புரிபவன் ஒழுக்க நெறி தவறியவனே...
ஜீவகாரூண்யம் அற்றவன் ஒழுக்க நெறி தவறியவனே...
காதல்நெறி தவறி காம உணர்ச்சிக்கு அடிமையானவன் ஒழுக்க நெறி தவறியவனே...
அகந்தை கொண்டவன் ஒழுக்க நெறி தவறியவனே...
பேராசை கொண்டவன் ஒழுக்க நெறி தவறியவனே...
வன்முறையைத் தூண்டுபவன் ஒழுக்க நெறி தவறியவனே...
நாவடக்கமில்லாத நயவஞ்சகன் ஒழுக்க நெறி தவறியவனே...
பொருள் மேல் பொருள்,
பணம் மேல் பணம் சேர்ப்பவன் ஒழுக்க நெறி தவறியவனே...
இயற்கையை மாசுபடுத்துவோன் ஒழுக்க நெறி தவறியவனே...
மேடை பேச்சில் மக்களை மயக்குவன் ஒழுக்க நெறி தவறியவனே...
நீதியைத் தன் வசதிக்கேற்ப வளைப்பவன் ஒழுக்க நெறி தவறியவனே...
பிறருடைய மனதை, உணர்வை புண்படுத்துபவன் ஒழுக்க நெறி தவறியவனே...
பிறருடையதை அடைய நினைப்பவன் ஒழுக்க நெறி தவறியவனே...
ஆக தானென்ற தன்னை அடக்கி ஆட்சி செய்யாது பிறரை அடக்கி ஆட்சி செய்யும், செய்ய நினைக்கும் எவனும் ஒழுக்க நெறி தவறியவனே...