சுதந்திரம்

கறிக்கடையில் உயிர் பயத்தில்
நிற்கும் கோழிகளாகவே நின்று
ஓட்டளித்துவிட்டு வீடு வந்த
உயிர்பலிகள் நாங்கள்......
சரியானவர்களை தேடித்தேடியே
நீள்கிறதிந்த இழிபிறப்பு.....
சங்கிலி யானைகளான எங்களுக்கு
சங்கிலி அறுக்கவோ,சாக்கடை
-சுத்தம் செய்யவோ இயலவில்லை
இன்று வரை.......
நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சிகளாய்
மரணத்தை முட்டி விட்ட
வரலாறுகளே எஞ்சியிருக்க.....
நாமும் கொண்டாடுவோம் சுதந்திரத்தை
சொந்த நாட்டில் பரதேசிகளாய்.....

எழுதியவர் : தமிழன் தங்கா (27-Aug-17, 8:12 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 111

மேலே