கோதை நீ

உன்னைக் கண்ட நொடி இன்னும் கண்ணோடு
என்னைக் கொண்ட நீ என் நெஞ்சோடு

என் இதயத்தின் ஒலிதனை கேட்பாயா
அதன் வலி கொஞ்சம் நீயும் அறிவாயா

சதை கொண்ட உடலிது கரைந்தாலும்
என் உயிர்கொண்ட காதல் கரையாது

வரம் ஒன்று கொடுத்திடு- பிரியாது
கரம் பற்ற நான் உண்டு என நீயும்

ஒளியினுள் நீ சென்று ஒளிந்தாலும்
என்னை எரித்துன்னைக் காண வருவேனே

உனக்கென நான் மட்டும் இருப்பேனே
எனச் சொல்ல கர்வம் தலைக்கேறும்

ஒருமுறை நீ என்னை பார்த்தாலே-தீரும்
இதுவரை நான் கொண்ட சாபம் யாவும்

வான் பார்த்த வறண்ட நிலமானேன்
எனக்குயிர் ஊட்ட மழையாய் வருவாயா

பாதையில்லா என் பயணத்தில் வழித்துணையாய் நீயும் வருவாயா

கனவு காணா என் கண்களுக்கு
கனவு மட்டும் காணச் சொல்கின்றாய்

தினம் நினைவினில் நீவந்து கொல்கின்றாய்

காட்டாறு போல கடந்த என் வாழ்வை
கரைவெட்டி அணை கட்டி தடுக்கின்றாய்

உலகினில் உனைப் போல் ஒருபெண்
இல்லையென உயில் ஒன்று நானும் தருகின்றேன்

கோதை நீயென யானும் கண்டேன்
பெருமான் நானென அறியாயோ பேதையே

வேடன்எனை கொன்றுவிட்ட குயில் நீயென அறிவாயா

கள்வன்எனைக் கடத்திட்ட புதையல் நீயென அறிவாயா

மதம் கொண்ட களிராய் மனம் கொண்டிருந்தேன்
மயிர்க் (கூந்தல்) கயிற்றில் கட்டி மனக்கூண்டில் அடைத்தாய் முறைதானோ

இருதயம் இரும்பென இருந்தவனை
இருவிழிப் பார்வையில் கரைத்திட்டாய்

இளகியதென் மனம் இனி என்ன உன் மனம்

கரம் பற்ற நீயும் வருவாயா
கடலெனக் காதல்
தருவாயோ

உயிர் கொண்ட உரிமையில் கேட்கின்றேன்
காதலென ஒருபொய் நீயும் உரைப்பாயா
இல்லை பேசாதிருந்தே என் இருதயம் எரிப்பாயோ

மரணத்தின்முன் வந்து பார்ப்பாயா
இல்லை மலர்க்கொத்து எனக்காய் சேர்ப்பாயோ..??

#கரிசல்மகன்

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (30-Aug-17, 12:40 am)
Tanglish : kothai nee
பார்வை : 280

மேலே