ஓ நந்தலாலா

நந்தலாலா நந்தலாலா ஓ நந்தலாலா!

நந்தவனமாய் வந்தாயோ நந்தலாலா?..
உன் வாசம் வீசுகிறதே நந்தலாலா...

காற்றாய் சூழ்ந்திருக்கிறாயோ நந்தலாலா?
உன் அரவணைப்பை உணர முடிகிறதே நந்தலாலா...

தாங்கும் பூமியாய் சுழல்கிறாயோ நந்தலாலா?
உன்னை மிதிக்கும் என்னை ஈர்த்து பிடிக்கிறாயே நந்தலாலா...

ஓங்கி உயர்ந்த சிகரம் நீயோ நந்தலாலா?
உன்னை எட்டிப்பிடிக்க என் மனம் விரும்புகிறதே நந்தலாலா...

அன்பாய் இருக்கிறாயோ நந்தலாலா?
அன்பு மேலிட பைத்தியம் பிடிக்கிறதே நந்தலாலா...

கருணையென்பது நீயோ நந்தலாலா?
கருணை குடிகொள்ள மண்ணுலகில் யாவும் இழக்கத் தூண்டுகிறதே நந்தலாலா...

சத்தியமாவது நீயோ நந்தலாலா?
நாளும் உயிர்துடிப்பாகிறதே நந்தலாலா...

அறமாவது நீயோ நந்தலாலா?
தன்னை செதுக்கி சிற்பமாக்குகிறதே நந்தலாலா...

காதலானாயோ நந்தலாலா?
உயர் வாழ்க்கை நெறி ஒழுக்கம் தருகிறதே நந்தலாலா...

நட்பென்பது நீ தானோ நந்தலாலா?
நாளும் புதுபுது அத்தியாயங்கள் எழுதுகிறதே நந்தலாலா...

ஞானமே நீயாவாய் நந்தலாலா...
உன்னை உணரும் அனுபவங்களே வாழ்க்கையாகிறதே நந்தலாலா...

நந்தலாலா நந்தலாலா ஓ நந்தலாலா!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Aug-17, 10:23 pm)
பார்வை : 250

மேலே