பறை முழக்கம்
எட்டுத் திக்கும் பறை முழக்கம்
கொட்டு முரசென கொள்கை பரவும்
திட்டம் தீட்டும் மாணவர் குழுமம்
பட்டுத் தெறிக்கும் ஒலிகள் செவியில்
நட்டு வைத்த மரமும் நாட்டியமாட
விட்டு விட மனமின்றி விடலைகள்
வட்டமாக வாட்டமுடன் பறையடிக்க
கட்டுக் கட்டாய் கவிக் குவியல்
பாட்டாகி எம்மருங்கும் ஆடிப் பாடுவார் .
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்