உழவு-அன்றும்,இன்றும்-ஹைக்கூ
1 ஏறு, கலப்பை கிணறு
ஏற்றம் நீர் இறைக்க
எருவூட்டிய நிலம்
2 அதிகாலை முதல் அந்தி சாயும்வரை
உழைப்பான் மண் மழை நம்பி
வலுவானவன் விரும்பி விருந்தோம்புவான்
( 1 ,2 -------------------அன்றைய உழவன் - ஹைக்கூ )
3 . டிராக்டர் கிணறு பம்ப்செட்
ரசாயன எரு கலந்த மண்
மண்ணும் மழையும் நம்பி வாழ்வு
(இன்றைய உழவன்...............ஹைக்கூ)
4 உழுதலில் நம்பிக்கை தேயுது
உழுநிலம் விலைக்கு போகுது
புதுபட்டணம் உருவானது, உழவன் (?)
5 . நாளை உலகில் உழுதிட மண்
இல்லாமல் போகலாம் உழவன்
இல்லாமல் போகலாம், உணவு(?)
(3 ,4 ,5 : இன்றைய உழவர் .....................ஹைக்கூ)