தன்னைக் காட்டியது

தன்னைக் காட்டியது !
கவிதை by :கவிஞர் பூ.சுப்ரமணியன்

மிதக்கும் மேகங்கள்
இடி மின்னலுக்கு.
கருமை காட்டியது !

வானில் முழுநிலா
சிரிக்கும் நட்சத்திரத்திற்கு
தன் முகம் காட்டியது !

ஓடும் நதி
ஆடும் நாணலுக்கு
குளுமை காட்டியது !

மணக்கும் மலர்
பறக்கும் பட்டாம்பூச்சிக்கு
வாசனை காட்டியது !

குழந்தை மழலைச்சிரிப்பு
அன்பான அன்னைக்கு
மென்மை காட்டியது !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை ,சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (2-Sep-17, 10:48 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 154

மேலே