சோறு கொண்டு போற புள்ள
சோறு கொண்டு போற புள்ள - வந்து
சோறு கொஞ்சம் போடு புள்ள
ஆடி அசஞ்சு வார புள்ள - உன்ன
அள்ளிக் கொள்ள ஆச புள்ள
சேலை வாங்கி தாரேன் புள்ள - கழுத்துல
மாலை ஒன்னு போடு புள்ள
சொந்தம் எல்லாம் நீதான் புள்ள - அத
சொல்லிப் புட்டேன் வாடி புள்ள
மனசுல உள்ள கவலை எல்லாம் நீ
வந்தா பறந்து ஓடும் புள்ள
உன்ன எண்ணி வாழ்றேன் புள்ள - நான்
உன்ன உயிரா நினைக்கிறேன் புள்ள