கடவுள்

உலகத்தை படைத்து அதில்
மனிதனை உலவ விட்டாய்
மனதை ஏன் ஒளித்து வைத்து அதில்
உணர்ச்சிகளை புதைத்து தைத்தாய் ...
பிறர் காண முகம் படைத்த நீ
அகம் அடைத்ததேனோ ?
யுகம் நீ சுகம் வாழ
சூட்சுமம் இதுதானோ ?
பிறப்பின் பலனறியாமலே
பலரை இறக்க வைத்தாய்
சிலரை மட்டும் ஏன் சிறக்கவைத்து
புகழால்பறக்கவைத்தாய்
மதம் கொண்டு நீயும்
வித விதமாய் தோன்றி நின்றாய்
இதம் நாடி வருபவரையும்
நிதம் தேடி பணிய வைத்தாய்
அனைவருக்கும் நீ பொது என்றால்
ஏற்றதாழ்வுடன் ஏன் படைத்தாய்
அனைத்தும் அறிந்தவன் நீ என்றால்
அழிவுக்கும் காரணம் நீ அன்றோ ....
விதிதான் நியதி என்றால்
அதுவும் நீ செய்த சதி அன்றோ
உன் சித்தமே இங்கு நிறைவேறுமென்றால்
நீயும் சுயநலவாதிதான் அன்றோ ??
கடவுளாய் இருப்பது எளிது
மனிதனாய் வாழ்வது கடினம்
ஆதலால் நீ ஒளிந்து புனிதனனாய்
சாதலால் நான் அழிந்து மனிதனானேன்....

by
நாஞ்சில் ஆலன்

எழுதியவர் : (4-Sep-17, 8:09 am)
சேர்த்தது : nanjilallen
Tanglish : kadavul
பார்வை : 69

மேலே