அவனும் நானும்

அவனும் நானும்
இலையும் பனியும்
அவனும் நானும்
கலையும் ரசனையும்

அவனும் நானும்
மேகமும் காற்றும்
அவனும் நானும்
தாகமும் மோரும்

அவனும் நானும்
வானும் நிலவும்
அவனும் நானும்
ஊனும் உயிரும்

அவனும் நானும்
பாட்டும் இசையும்
அவனும் நானும்
பூட்டும் சாவியும்

அவனும் நானும்
கவியும் கருவும்
அவனும் நானும்
புவியும் விசையும்

அவனும் நானும்
பூமியும் நீரும்
அவனும் நானும்
சாமியும் பூஜையும்

அவனும் நானும்
கடலும் நீலமும்
அவனும் நானும்
மடலும் மையும்

அவனும் நானும்
சோறும் குழம்பும்
அவனும் நானும்
சேறும் புழுவும்

அவனும் நானும்
வேறும் மரமும்
அவனும் நானும்
தேரும் சிலையும்

அவனும் நானும்
மெழுகும் ஒளியும்
அவனும் நானும்
கழுகும் பிணமும்

அவனும் நானும்
உழுதலும் நிலமும்
அவனும் நானும்
தொழுதலும் நோன்பும்

அவனும் நானும்
காயும் கனியும்
அவனும் நானும்
சேயும் தாயும்

அவனும் நானும்
பூனையும் எலியும்
அவனும் நானும்
பானையும் மூடியும்

அவனும் நானும்
கண்ணனும் ராதையும்
அவனும் நானும்
எண்ணமும் எழுத்தும்

அவனும் நானும்
இரவும் இருளும்
அவனும் நானும்
உறவும் உவகையும்

அவனும் நானும்
பகலும் கதிரும்
அவனும் நானும்
நகலும் அசலும்

அவனும் நானும்
மழையும் குளிரும்
அவனும் நானும்
துளையும் குழலும்

அவனும் நானும்
பசுவும் பாலும்
அவனும் நானும்
திசுவும் நரம்பும்

அவனும் நானும்
சுவாசமும் ஆக்ஸிஜனும்
அவனும் நானும்
வாசமும் அரும்பும்

அவனும் நானும்
பெண்ணும் நாணமும்
அவனும் நானும்
கண்ணும் கருவிழியும்

அவனும் நானும்
விரலும் நகமும்
அவனும் நானும்
குரலும் சொல்லும்

அவனும் நானும்
உதடும் சிரிப்பும்
அவனும் நானும்
சடுகுடுவும் கபடியும்

அவனும் நானும்
விழாவும் விருந்தும்
அவனும் நானும்
விலாவும் எலும்பும்

அவனும் நானும்
கனவும் ஏக்கமும்
அவனும் நானும்
நினைவும் நிஜமும்

அவனும் நானும்
ஊஞ்சலும் ஆடலும்
அவனும் நானும்
கிளிஞ்சலும் முத்தும்

அவனும் நானும்
நடையும் மூச்சும்
அவனும் நானும்
உடையும் உடலும்

அவனும் நானும்
மன்னவனும் மகாராணியும்
அவனும் நானும்
என்னவனும் என்னவளும்

அவனும் நானும்
ஊடலும் கூடலும்
அவனும் நானும்
தேடலும் தொலைதலும்

அவனும் நானும்
தலையும் கூந்தலும்
அவனும் நானும்
தலைவனும் தலைவியும்

அவனும் நானும்
நானும் அவனும்
ஒன்றே தானும்
என்றே ஆகும்
அன்றே போகும்
ஊனும் உயிரும்

எழுதியவர் : யாழினி வளன் (4-Sep-17, 8:15 am)
Tanglish : avanum naanum
பார்வை : 946

மேலே