அன்பின் யாசகம்

கேட்க ஆயிரம்
கேள்விகள் இருந்தும்
கொட்டி அழுதிட
கோடி காரணங்கள் இருந்தும்
நாம் பிரிய நினைத்தபோது
கடைசியாய் ............
நீ என்னிடம் பேசி
முடிக்க நினைக்கையில்
யாசகமாய்
ஐந்து நிமிடம் கேட்டு
வார்த்தைகள் அற்று
என் கண்ணீர் மட்டும்
மௌனமாய்
என் காதலை மீண்டும்
உன்னிடம் பேசியது ...
அன்பில் யாசகம் ....
வலி நிறைந்த கொடுமை ....

எழுதியவர் : (4-Sep-17, 12:26 pm)
Tanglish : anbin yaasakam
பார்வை : 133

மேலே