அவள் அழகில் திமிர் ஓர் களங்கம்
பெருந்தனமும் பேரழகும்
தந்த இறைவன் உனக்கேன்
விநயம் தந்திடவில்லையே
உன் அழகைப் பார்க்க நினைக்கையில்
உன் திமிர் அந்த பால்நிலவின்
களங்கம்போல் உன் அழகிற்கு
குறையாகிவிட்டதே நீ அறியாயோ !