ஆசிரிய பிரம்மாக்களை இந்நாளில் நினைவுகூர்கிறேன்

உனக்கு வயசு நாலு தாண்டா நடக்குது
அதுக்குள்ள ஒன்றாம் வகுப்பில் சேர
வந்துட்டியா "ராஸ்கல் " ஒழுங்கா படிக்கணும்
என்று காதை திருகியபடியே சொல்லி வகுப்பில்
அமர வைத்தார் "ஜோசப் " வாத்தியார் !

அடிக்கடி "praise the lord "
சொல்லிக்கொண்டே இருப்பார் !
தங்களை நினைவு கூர்கிறேன் ஐயா !

நீளமான கூந்தல் ! கொஞ்சம் மல்லிகை பூ !
குடை வைத்து இருப்பார்கள்
அவ்வளவு அழகான டீச்சர் !
உனக்கு கையெழுத்து நல்லா இருக்குடா !
இந்தா இன்னும் கொஞ்சம் சாப்பாடு நீயே சாப்டுக்கோ !
எனக்கு போதும்
நித்தம் மதிய வேளையில் உணவு தருவார்கள் எனக்கு !
எனக்கு பிடித்த எட்டாம்வகுப்பு வகுப்பு ஆசிரியை !
என்மீது கொள்ளைப்பிரியம்
என்றுமே ! அன்பான "ஜோதிமணி " டீச்சர்
( என் முதல் காதலை மறைத்து விட்டேன் )

அடிக்கடி "கருவாயா" என செல்லமாய் கூப்பிடுவார்கள் !
தங்களை நினைவு கூர்கிறேன் டீச்சர் !

தமிழ் இனிக்கும் என்பதே !
இவர் கற்றுக்கொடுத்துதான் உணர்ந்து கொண்டேன் !
திருக்குறள் இத்தனை அர்த்தம் பொதிந்தது என்பதும் !
"ல ள ழ " உச்சரிப்புக்கள் இப்படிதான் என்பதும் !
எனக்கு கவிதை வரும் என்பதும்
அதற்க்கு முன்னுரையும் முகப்புரையும்
எழுதியவரும் இவர்தான் !
ஒன்பது பத்தாம் வகுப்பு தமிழ் ஆசான் பாசமிகு "நீ .இளங்கோவன் "ஐயா !

அடிக்கடி "கடவுள் இல்லை" என்பது இவர் வாதம்
கருப்புச்சட்டை மட்டுமே அணிந்து வருவார் !

கணிதம் ! இல்லையேல் ! ஒன்றுமே கிடையாதே !
நீ கணிதம் ஒழுங்கா கற்றுக்கொள்
அடிக்கடி அடிக்கடி ! அதிகமா அடி ! அப்பப்பா ! எவ்ளோ அடி !
என் கணித ஆசிரியர் "ராஜலிங்கம் "

அடிக்கடி மூக்குப்பொடி போட்டுக்கொண்டே இருப்பார் !
தும்மல் வரும் எனக்கு !

எத்தனை சிறப்பு மிக்கது இந்த ஆசிரிய பணி!
சுயநலம் இல்லா தூய்மையான பணி!
ஏணிப்படியாகவே இன்று வரை வாழ்வை தொடரும்
எல்லா ஆசிரிய பிரம்மாக்களையும்
இந்நாளில் நினைவுகூர்கிறேன் !

எழுதியவர் : முபா (5-Sep-17, 11:22 am)
பார்வை : 301

மேலே